Thursday, 20 November 2014

ஆத்மா ராமா


கண்கள் மூடிட நிழலாடும்
காவிய நாயகன் திவுருவம்
மெய் மேனி நிஜமாகும்
மெய்யே அவன் நிஜமாகும்
கல்வி கேள்வி தேவையில்லை
கண்டால் போதும் மனமதுவே

Tuesday, 18 November 2014

பொழுது புலர்ந்தது…!!!


           பறவைகளின்  க்ரீச்..  க்ரீச்…  சத்தம்.  பொழுது  புலர்கிறது. அதிகாலை வேளையில்  அச்சத்தம்  இனிமையாக  கேட்கிறது. விழித்தும்  எழ மனமில்லாமல்  பறவைகளின்  அந்நாளின் வரவேற்பைக் கேட்டவண்ணம்  படுத்துக்  கிடப்பது  தனி  சுகம். விடுமுறை நாள் என்றால்  கேட்கவே  வேண்டாம்.


Monday, 17 November 2014

ஒரு கோப்பை குளம்பி


காப்பி பிரியர்களே....வாருங்கள்

ஒரு கோப்பை குளம்பி அருந்தலாமா...?

நீ கூப்பிட்டுவிட்டாய்....காப்பின்னு வேற சொல்லிட்ட...அப்புறம்...அது வந்து

என்ன காப்பிம்மா...

புரூ காப்பியா...இல்லை..சன்ரைஸா...வேற ....ம்ம்....நெஸ்கேப் என்ன கரைக்கிட்டா...இரு.. இரு...பில்டர் காப்பி....?


சுவைத்துக் குடிக்கையில்...அஹா...அந்த நிமிடங்கள்....பிலீஸ் தொந்தரவு செய்யாதீர்கள்....
நீ என்ன சும்மா இல்லாமா இப்போ ஆசையை கிளப்பிட்ட... என நினைப்பவர்கள் ....

ஒருகையில் காப்பியுடன் படிக்க... 


Friday, 14 November 2014

உலா போகும் நேரம்...!!!
நிலவு
உலா போகும் நேரம்

சூரியன்
குடைக்குள் மறைந்தான்

Thursday, 13 November 2014

இலயிப்போமா....!!!


பாடல்கள் சிலவற்றை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்

நாமாவளி பாடல்கள் நம் மனதை கரைத்து விடும்.

அதன் இனிமையை சுவைத்து தான் உணரமுடியும்.

கேளுங்களேன் ...


கண்ணன் பாடல்


கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்
கவர்ந்திட்டாய் நாளுமெனை மறந்து கிடக்க
காதுதுடிக்கிறது கேளா திருந்திட்டால் என்செய்வேன்
காதுகுளிர நாளும்கதை கொடு

Wednesday, 12 November 2014

விழித்தல்...!!!


உலகைப் புரிய வைத்த
உறவுகளுக்கு ஒரு கோடி நன்றிகள்

சூழலைப் புரிய வைத்த
சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

Tuesday, 11 November 2014

மென் சுவாசம் விட...!

நாற்பதுக்கு மேலே
நாடிவருமொரு தனிமை
நலமோ…? பெண்மைக்கு
உடல்தரும் இம்சை...

கொஞ்சிய குழந்தைகள்
விடலைகளாய் வளர்
விஞ்சிய பொழுது 
விரயமாய் நிற்க யாம்
தஞ்சிய நேரம் 
தழுவும் சோம்பலை

திடீரென ஓய்வு 
திகட்டும் இனிப்பாய்...Sunday, 9 November 2014

வானத்தின் முகவரிமுகவரி மாறியது
வானத்தில்
மழை.

கையில் கடிதம்
தட்டியது கதவை
இடி

Wednesday, 5 November 2014

பாலாஜிக்கு பா இரண்டு

இன்று இரண்டு பாடல்கள்.
பாமாலை பாடல் 1எண்ணில் அடங்கா ஏழுலகில் அடங்கா
தண்ணில் அடங்கும் அவன் தாள்படிவாய்
கண்ணில் நிறைவான் கருத்தில் உறைவான்
சுவைவாய் அவன் பெயர் மொழி

Sunday, 2 November 2014

தண்ணீர் இல்லாமல் எப்படி காம்பெளண்ட் கட்டுவது

வீடு கட்ட இடம் வாங்கியாச்சு. போர் போட வேண்டும் அல்லவா…?
பூமிக்குள் எங்கே தண்ணீர் இருக்குன்னு பார்க்க போர் ஆபீஸில் இருந்து ஆளைக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் இடத்துப் பக்கத்தில் ஒரு மரக்கிளையை எடுத்துக் கொண்டு கவட்டைப்புல் அடித்து விளையாடுவோமே அது மாதிரி உடைத்துக் கொண்டார்.