Thursday 2 October 2014

கிருஷ்ண கானம்

பாடல் 20



மழலை மொழி கேட்கிறது எங்கிருக்கிறாய் கண்ணா - உன்   (2)
மறைந்து விளையாடல் செய்கிறாயா மன்னா - நீ  (2)
சிரிப்பின் சப்தம் அறிந்து கொண்டேன் மாட்டப் போகிறாய் - நீ (2)
கலகலவென சிரிப்பின் சப்தம் எட்டிதிக்கிலும் செய்கிறாய் நீ (2)


கோபர்களே வாருங்கள் கோவிந்தனைச் சுற்றி வளையுங்கள் (2)
கோபியரின் கண்டனம் கோதை என் செய்வேன் கண்ணா (2)
வெண்ணெய் சட்டி காணவில்லை எங்கு எடுத்துச் சென்றாய் கண்ணா (2)
செய்யும் சேஷ்டை அளவேயில்லை ஆனந்தம் எனக்கு- பரமானந்தம் எனக்கு


வீடெங்கும் தீபவொளி சூரியன் உனக்காக (2)
வாடாவாடா கண்ணா வடிவுடனே என்முன் (2)
தாயாள் இயலவில்லை காலெல்லாம் நோவு (2)
அம்மா அம்மா பாரு தாயே உன்முன் நான் தான் (2)


பசித்த களைப்பு தாயே ஏன் எனக்காய் பரிதவிக்கிறாய் (2)
வெண்ணெய் தந்தேன் உண்ணு வேறறுக்கும் மாயை (2)
என் பின்னே எழுந்துவா ஏகாந்தம் உனக்கு உண்டு (2)
தாயே தாயே நீ தான் தஞ்சம் உனக்கு நான் தான் (2)




மீண்டும் ஒரு கிருஷ்ண அமுது தந்தார் கிருஷ்ணர் நன்றியப்பா.

படம் கூகுள் நன்றி

13 comments:

  1. மிகவும் ரசித்துப் படித்தேன் சிறந்த நற் பாடல் வரிகள் .வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  2. கிருஷ்ணனின் கானம் பாடும்போது அழகாய் வெண்ணைபோல் வழுக்கியது அருமை.

    ReplyDelete
  3. கிருஷ்ணகானம் அமுதாய் படைத்த சகோதரிக்கு என்ன சொல்ல! அழகு தமிழ்!

    வாழ்த்துக்கள் சகோதரி! கிருஷ்ண பக்தையோ!!??

    ReplyDelete
  4. அழகான படமும் அதற்கேற்ற மாதிரி நல்லதொரு கானமும் அருமை.

    ReplyDelete
  5. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரி.

    பாடல் வரிகள் மிக அருமையாக உள்ளது நானும் பாடி மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
    த. ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    ReplyDelete
  7. . அருமையான வரிகள் கதை சொல்வது போலவே ஒரு உணர்வு ரொம்பவே ரசிதேன் கவிதை யையும் சுட்டித் தனத்தையும். மேலும் தொடர வாழ்த்துக்கள் ...!
    மழலை மொழி கேட்கிறது எங்கிருக்கிறாய் கண்ணா - உன் னை (2)
    மறந்து விளையாடல் செய்கிறாயா மன்னா - நீ (2)
    சிரிப்பின் சப்தம் அறிந்து கொண்டேன் மாட்டப் போகிறாய் - நீ (2)
    கலகலவென சிரிப்பின் சப்தம் எட்டிதிக்கிலும் செய்கிறாய் நீ (2)

    ReplyDelete
    Replies
    1. அருமையான வரிகள் கதை சொல்வது போலவே ஒரு உணர்வு ரொம்பவே ரசிதேன் கவிதை யையும் சுட்டித் தனத்தையும். மேலும் தொடர வாழ்த்துக்கள் ...!

      நன்றி சகோதரி.

      Delete