Wednesday 8 October 2014

காகித கப்பல்கள்




வண்ணக் காகிதத்தில்
விதவிதமாய் கப்பல்கள்
ஓடும் எங்கள் முற்றத்தில்
மழையின் வருகையால்…

நோட்டின் நடுப்பக்கம்
விரைவாய் வந்திடும் வெளியே
அம்மாவின் கையோ விரைந்து
வந்திடும் முதுகில்…

முடிந்த கல்யாண பத்திரிக்கைகள்
கப்பல் வடிவெடுக்க கைகளில் நீட்டப்படும்
வீணாய் எதையும் ஆக்கலாகது என…
விளையாடில் விளையாட்டாய் நேர்ப்பிப்பர்

அண்டாகுண்டாக்களில் மழை நீர் சேமிப்பு
சிறு மழையின் போது முற்றத்தின் கழுவல்கள்
வத்தப் பாய்களோ….
வந்திடும் குளிக்க…
பிடித்த வத்தல்…
எளிதில் பிரியாவிடை நல்கும்

பட்டியக்கல்லில் அமர்ந்து
வானம் பார்க்கையிலே...
வெறுமை மனது வானவெளி போகையிலே...
மனச்சுமை குறைந்ததால்…
வந்திடும் பயம் நமக்கு
மூடு மந்திரமாய் சூழ்நிலை இருக்கையிலே
மனமது ஏனோ மூடிப் போகுது

கழுவியது முற்றம் மட்டுமல்ல
     சிறிது நேரம் நம்மனதையும் தான்.     


வண்ணக் காகிதத்தில்
விதவிதமாய் கப்பல்கள்
ஓடும் எங்கள் முற்றத்தில்
மழையின் வருகையால்…

இன்று ஏனோ...
படம் பார்க்கையிலே
பழைய நினைவுகள்...
குழந்தைப் பிராயம்
குதூகலமானது தான் இல்லையா...?


11 comments:

  1. கத்திக் கப்பல் வேறு செய்தோமே ,மறந்துடுத்தா )
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இல்ல... அப்புறம் நாலு விரல்கள் பிடிக்கிற மாதிரி கப்பல் வேறு சொய்வோம் இல்ல..இப்போது தான் அதுவும் நினைவு வருது. நன்றி ஐயா.

      Delete
  2. குழந்தைப் பிராயம் குதூகலமானது தான். அந்த பிராயம் திரும்ப கிடைக்காதா என்று எண்ணி பெருமூச்சு விடுபவர்கள் ஏராளம் இம்மண்ணில்.

    ReplyDelete
  3. பழைய நினைவுகளை எல்லாம் மீட்கிறது ரசித்தேன் கவிதை நன்று வாழத்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சகோ

      Delete
  4. Replies
    1. ஆகா சொந்த மண்ணில் இருந்து மறுமொழி...நன்றி. சந்தோஷமாக இருந்து விடுமுறைகளை கழித்து வாருங்கள்.

      Delete
  5. வணக்கம் சகோதரி.!
    மலரும் நினைவுகளை அற்புதமாய் மலர்த்தி விட்டீர்கள் சகோதரி.! தங்கள் கவிதை கண்டு, சிறு வயதின் சந்தோஸங்கள் மழையாய் பெருக, அதில் என்றும் பழைய நினைவலைகள் காகிதக் கப்பல்களாய் நகர்கிறது,
    பகிர்ந்தமைக்கு நன்றி.!
    தங்களுக்கு அவகாசம் இருந்தால், என் தளத்திற்கு சிரமம் பாராமல் வருகை தந்தால் மகிழ்வுறுவேன்!
    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்..

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    சிறு வயது நினைவுகள் சுகம் அல்லவா.. சற்று நேர சிந்தனைகளே நமக்கு சக்தி அளித்திடவல்லது...குழந்தைப் பிராயம்.

    ReplyDelete
  7. மழை நினைவுகளை கிளறிவிட்டது கவிதை! அருமை!

    ReplyDelete