Saturday 25 October 2014

ஆப்பிள் லஸி




தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1
தயிர் அல்லது கெட்டி - மோர் - 1 கோப்பை
சர்க்கரை - 4 அ 5 மே.க
வெண்ணிலா எஸ்சன்ஸ் - 2 துளிகள்



முதலில் ஆப்பிளைப் போட்டு சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 1 மே.க அரைத்தில் இருந்து தனியே எடுத்துக் கொண்டு  1 மே.க தயிருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்
அப்போது தான் ஆப்பிள் கலர் மாறாமல் இருக்கும்.

அதை கொஞ்சம் எடுத்துக் கொண்டு விட்டு ஆப்பிளுடன் மற்ற பொருட்களையும் மில்ஸியில் இட்டு அடித்துக் கொள்ளவும்.மாவு போன்று அரைக்க வேண்டாம்.

பரிமாறும் போது தனியாக எடுத்ததை மேலே பரவவிடவும்.

புதிய சுவையுடன் இருக்கும்.

தயிரில் ஆப்பிள் போடப்படுவதால் சட்டென  ஆப்பிள்  ஆக்ஸிடைஸ் ஆகாது.

  

11 comments:

  1. செம டேஸ்டா இருக்கும்போல ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க...நன்றி சகோ.

      Delete

  2. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    ReplyDelete
  3. ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்திருக்கின்றேன். பாதாம், ட்ரை ஃப்ரூட்ஸ் கூட செய்திருக்கென்... ஆப்பிளும்.....சகோதரி, கொஞ்சம் வெண்ணை சேர்த்து அடித்துப் பாருங்கள் பிடித்திருந்தால் நன்றாக இருக்கும்...ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் கொஞ்சம் எடுத்து வைத்து செய்ததில்லை...செஞ்சுட்டாப் போச்சு......பகிர்வுக்கு மிக்க நன்றி-கீதா

    ReplyDelete
  4. இரண்டு மூன்று பழங்களை சேர்த்து தான் செய்வது வழக்கம் இனிமேல் ஆப்பிள் தனிய செய்து பார்க்கிறேன். நன்றி தோழி !

    ReplyDelete
  5. செய்து பார்த்துவிடுகிறோம்.
    நன்றி

    ReplyDelete