Saturday 19 July 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 26

கவிதைத் துளிகள்


நிலம்

விளை விப்பவன்
இன்றி...
வீணாய்கிடக்கிறேன்...

விளைய நான் ரெடி...
விளைவிக்க
நீங்கள் ரெடியா...?





வினை

மரம் வளர்த்தாய்
மழை வந்தது...
வா...வா..
எனும் முன்னாள்...!

மரம் வெட்டினாய்
மழை போனது...
டா...டா... என்றது...!

வினைவிதைத்தாய் - தமிழுக்கு
தெரிந்து போனது
மழைக்கு கூட -
ஆங்கிலம்.


வலி

துடித்ததால்...
உகுந்தன...
கண்ணீர் பூக்கள்...!!!

உன் -
வார்த்தையின்
வலிமையை...

விழிகள்...
எனக்காய் -
சாட்சி சொன்னன...!


ஓட்டம்

போட்டி வைத்தேன்
நிற்கவில்லை
கடிகார முட்கள்...
ஓடிக் கொண்டேயிருந்தன...!

அப்பா...
நின்றேன் நான்
நின்றன முட்கள்
செயல் இழந்த செல்களால்...!


நீர் துகள்கள்

செயற்கை மழையில்
நனைந்தேன்...

சிறு ஆனந்தம்...ஆம்...!!!
ஸ்நான அறையில்...!








ஆர்.உமையாள் காயத்ரி.

5 comments:

  1. கவிதைத் துளிகள் அத்தனையும் கதை கூறுகின்றன!

    ஒட்டம் கண்டு என்னுள்ளம் அப்படியே நிற்கின்றது!

    அத்தனையும் அருமை! வாழ்த்துக்கள்!

    உங்கள் பதிவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
    தவிக்கின்றேன் சகோதரி!..
    கருத்திட வர முடியாமல் போவதைச் சொல்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. வந்து கருத்திட்டு
      வாஞ்சையோடு வருத்தப்பட்டு
      வாழ்த்து சொன்ன இளமதிக்கு
      வந்தனங்கள்...!!!

      நன்றி.

      Delete

  2. வணக்கம்!

    விளைக்கின்றேன் வெல்லுதமிழ்! நன்நிலப் பாவாய்
    விளைந்திடுவாய் நன்றே விரைந்து!

    நான்கு தலைப்பில் நவின்ற கவிபடித்தேன்!
    தேன்பூ மணக்கும் திரண்டு!

    உமையாள் அளித்த உயர்தமிழ்ப் பாக்கள்
    இமையுள் புகுந்தன இன்று!

    தொடா்ந்து என் வலையில் மரபுக் கவிதை பாடும் பாடங்களை எழுத உள்ளேன்
    படித்துப் பயன்பெறுக.

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      வந்திருந்து வாசித்து
      வாழுத்துக் குறள் அர்ச்சித்து
      வாழ்த்திய ஐயாவுக்கு
      வணக்கத்துடன் நன்றி.

      Delete
  3. வினையும் செயற்கை மழையும் கவர்ந்தன! அனைத்தும் அருமை! நன்றி!

    ReplyDelete