Wednesday 9 July 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 24

கவிதைத் துளிகள் - 16

விம்

நிறங்களின்
நெகிழ்ச்சி -                                                                              
தூரிகைகளின்


வீழ்ச்சி -

கலைஞனின்
ஆட்சி -
கண்முன் வந்தது
சாட்சி...!



கவிதை - 17

நிஜம்...?

உள்ளும் வெளியும் ஒன்றாகி
உள்ளே நிற்பது அவனாகி
அவனும் இவனும் ஒன்றானால்
அண்டமும் பிண்டமும் நிஜமாகும்...!!!


கவிதை - 18

அகம் - முகம்

உணர்வுகள்
உள்ளே முத்தமிட -
சத்தம் மட்டும்
கவிதையாய்...
விழிகள் சிரிக்கும்...!

உணர்வுகள்
உள்ளே சண்டையிட -
சத்தம் மட்டும்
கவிதையாய்...
விழிகளில் நீர் பூக்கும்...!


கவிதை 19

குழந்தை - ஆடை

குளிர்....
கட்டுப்பட வேண்டும்....!!!

வெயில்...
வெட்கப்பட வேண்டும்...!!!


கவிதை - 20

கணக்கு...?...!

அலைகளின் முத்தத்திற்கு
அளவு ஏது...?

கரைகளிடம் -
கணக்கு இல்லை...!




ஆர்.உமையாள் காயத்ரி.



படங்கள் - கூகுளுக்கு நன்றி

11 comments:

  1. மிக நன்றாக எல்லாக்கவிதைகளும் எழுதியிருக்கிறீங்க. ஓவியம் கூடுதலாக பிடித்திருக்கு.
    அதைவிட அதிகமா குழந்தை ஆடை கவி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரியசகி...எல்லா கவிதைகளையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
    2. ரசித்துப் படித்து... தொடர்ந்து கருத்திடுவது எனக்கு ஊக்கம் அளிக்கிறன்றது நன்றி.

      Delete
  2. வண்ணங்களான நிஜம்
    உணர்வுகளே கவியாக
    உடை இழந்த குழவி
    கண்டு நாணமோ?..

    இல்லை..
    கரைதொட்ட அலைமுத்தம்
    எண்ணியதாலோ?..

    அட!.. அட!... என்னவெனச் சொல்லி வாழ்துவது உங்களை..
    அபாரம் உங்கள் கற்பனை! + கவிதைகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு கவிதையிலேயே...
      கருத்திட்ட இளமதியே...
      ரசித்துப் படித்து... தொடர்ந்து கருத்திடுவது எனக்கு ஊக்கம் அளிக்கிறன்றது நன்றி.

      Delete
  3. நல்லரசனையான கவிதை சகோதரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல ரசனையுடன் படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே...

    ReplyDelete
  5. வணக்கம்
    அலைகளின் முத்தத்திற்கு
    அளவு ஏது...?
    தங்களின் ஒவ்வொரு படைப்புக்கும் நிகர்ஏது
    ஒவ்வொரு கவிதைத்துளிகளும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கவிதைத்துளிகளை வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  7. ஓவியத்தின் ஒவ்வொரு எழுத்தும் வண்ணமயமாக அல்லவா இருக்கிறது.

    அனைத்து கவிதைகளும் ஆரம் சகோதரி.

    ReplyDelete
  8. ஓவியம் அல்லவா... அதான்.
    தொடர்ந்து கருத்திடுவதற்கு நன்றி சகோதரரே..

    ReplyDelete