Sunday 13 July 2014

கவண் அரிசி (கருப்பு அரிசி)


 செட்டி நாட்டு ஸ்பெஷல் கவண் அரிசி இனிப்பு.

சத்தான இனிப்பு. 

இந்த அரிசியில் உள்ள சத்துக்கள் நம் உடம்பில் அப்படியே சேரும்.






தேவையான பொருட்கள்

கவண் அரிசி - 1 கோப்பை
சர்க்கரை - 1 1/4 கோப்பை
தேங்காய் - 1/ 2 கோப்பை
ஏலக்காய் - சிறிது




அரிசியை 4 மணி நேரம் ஊறவிடவும்.

1 : 2 1/4 அளவில், ஊறிய தண்ணீருடன் மீதி தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.






வெந்த பின் கரண்டியால் நன்கு கிண்டி விட்டு  சற்று ஆறவும் சர்க்கரை சேர்க்கவும்.





தேங்காய் துருவல் சேர்க்கவும்.
ஏலம் சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கவும்.







சுவையாக சாப்பிடுங்கள்....!!!




ஆர்.உமையாள் காயத்ரி.




9 comments:

  1. வணக்கம்“
    சகோதரி
    அறியாத சமயல் முறை எளிமையான விளக்கம்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. புகைப்படத்தை பார்த்தாலே நாக்கு ஊறுகிறது.

    ReplyDelete
  3. வீட்டில் சொல்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  4. இங்கு அந்த அரிசி, சீன மளிகை சாமான் கடைகளில் கிடைக்கும். அதில் இந்த உணவை செய்யும்போது,சுவை இன்னும் கூடாதலாக இருக்கும். நாங்கள் ஊருக்கு போகும்போது, இந்த அரிசியை எல்லோருக்கும் கொடுப்பதற்காக வாங்கிக்கொண்டு செல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. தஙளின் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  7. சத்தான உணவு! பகிர்வுக்குநன்றி!

    ReplyDelete