Tuesday 21 January 2014

Carrot Rice (கேரட் சாதம் )



தேவையான பொருட்கள்


கேரட் துருவல்   -   1 கோப்பை
பச்சை மிளகாய்   -   1
வெங்காயம் நறுக்கியது -   1 கோப்பை
கொத்தமல்லி  - சிறிதளவு
சாதம்  - 1 உளக்கு அரிசியில் ஆனது
உப்பு  - தேவையான அளவு
மிளகாய்ப் பொடி(Flakes)  - சிறிதளவு





சாதத்தை ஆறவிட்டு வைத்துக் கொள்ளவும். அதன் மேல் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை பரவினார் போல் விட்டு வைக்க, ஆறிய பின் கிளரினால் சாதம் உதிர்,உதிராக வரும் 





தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
சீரகம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய்  -  1
                      கருவேப்பிலை – சிறிதளவு



வாணலியில் எண்ணெய் காயவும் கடுகு போடவும். கடுகு நன்கு வெடித்தபின் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும். பின் கடலைப் பருப்பு, உளுத்தப் பருப்பு, சீரகம்,கருவேப்பிலை போடவும்

இப்போது பச்சைமிளகாய் போட்டு 4, 5 வதக்கு வதக்கவும்,வெங்காயம் போட்டு வதக்கவும். சற்று வதங்கவும் கேரட் போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய் Flakes யை மிக கொஞ்சமாக தூவவும். கொத்தமல்லி போட்டு கிளரவும். மிதமான தீயில் சாதம் போட்டு நன்கு கலக்கி விட்டு இறக்கவும்.

பார்க்க அழகான ஆரஞ்சு கலரில்  கேரட் சாதம் தயார்.


ஒரு  நாள்  எளிதான சத்தான,  வித்தியாசமான  இதை  செய்து  பாருங்களேன்.




பார்வையாளர்களுக்கு நன்றி.

                                                                இன்றைய நாள் இனிதாகட்டும்.


ஆர்.உமையாள் காயத்ரி.

1 comment:

  1. குழந்தைகள் உட்பட எல்லோருக்குமே பயனுள்ள சமையல் குறிப்பு... நன்றி அம்மா...

    ReplyDelete