Saturday 25 January 2014

வெள்ளை மொச்சைக் குழப்பு



தேவையான பொருட்கள்

வெள்ளை மொச்சை – ½ உளக்கு
வெங்காயம் – 1
பூண்டு பல் – 8
தக்காளி – 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
சாம்பார் பொடி – 1 மேசைக்கரண்டி
மல்லிப் பொடி – 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு






தாளிக்கத் தேவையானவை

எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
சேப்பு – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை – சிரிதளவு


மொச்சையைய் முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். இதை குக்கரில் உப்பு போட்டு வேக விடவும். 


வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்துக் கொள்ளவும். பின் வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும் அடுத்து பூண்டை வதக்கி பின் தக்காளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும். சாம்பார் பொடி, மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி போட்டு கிளரவும். பொடிகள் சற்று கலர் மாறும். 



இப்போது கரைத்து வைத்து இருக்கும் புளிக் கரைசலை விடவும்.உப்பு மொச்சையிலும் இருப்பதால் பார்த்துப் போடவும். மொச்சையையும் போட்டு குக்கரில் 1 விசில் விடவும். சிறிதளவு வெல்லம் போட்டு கலக்கி விட்டு பரிமாறவும்.



காரக் குழப்பு அனைத்திற்கும் நல்லெண்ணெய் உபயோகித்தால் சுவை மிக நன்றாக இருக்கும்.     


ஆர். உமையாள் காயத்ரி.





No comments:

Post a Comment